யாழில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள மீனவர்கள்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக, நாளை வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம் என யாழ் மாவட்ட கடல் தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தி இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

இலங்கை அரசின் அலட்சியத்தாலும்,இந்திய மீனவர்களின் அத்துமீறலாலும் எமது பண்டிகை துக்கத்தில் ஆரம்பிக்கின்றது.

எமது வாழ்வாதாரத்தை தாக்கும் வகையில்,இந்திய மீனவர்கள் அத்துமீறி செயற்படுகின்றனர்.இதற்கு இலங்கை அரசு,மீன்பிடி அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாம் பண்டிகை கொண்டாட வேண்டிய நேரத்தில்,நாளை யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தை நாம் மேற்கொள்ளவுள்ளோம்.

நாம் எல்லோருக்கும் மகஜர் குடுத்து களைத்து விட்டோம்.நாம் இனி அப்படி செய்ய மாட்டோம்.

இந்திய மீனவர்கள் வருடத்துக்கு சுமார் 144 தடவைகள் இங்கு வருகை தந்து 900 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திவிட்ட செல்கின்றனர்.

நாம் குறிப்பாக தமிழக இராமேஸ்வர மீனவர்கள் எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.அதை முதலில் நிறுத்துங்கள் என கேட்டுக்கொள்கின்றோம்.

உங்கள் மீனவர்கள் இங்கு வராமல் விட்டால் நாமும் எங்கள் குடும்பங்களை சேர்த்து பண்டிகை கொண்டாடுவோம்.

எங்கள் வளத்தை அழித்து நீங்கள் எமக்கு உதவி செய்ய வேண்டாம்.நீங்களும் வாழத் தான் வேண்டும்.எங்களையும் வாழ விடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply