தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சு நடத்த ஐ.தே.க. தீர்மானம்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக, பல தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் பேச்சு நடத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையிலான, முன்னாள் ஆளுநர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன,; கீர்த்தி தென்னகோன், அசாத் சாலி, சட்டத்தரணி சிரால் லக்திலக்க, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க ஆகியோருடன் ஐக்கிய தேசியக் கட்சி சிறிகொத்தவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் முன்னேற்றம் குறித்து கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் விளக்கமளித்துள்ளதுடன், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளுடன் கலந்துரையாடுமாறு ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து சக்திகளையும் திரட்டி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஏனைய அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடரும் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply