கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் இன்று காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் குறித்து அடுப்புவெடித்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த வெடிப்பு சம்பவத்தில் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது .





