ஸ்ரீ ஜயவர்தனபுரகோட்டை மாநகர சபை முதல்வரை தாக்கிய இருவருக்கு நேர்ந்த கதி..!

ஸ்ரீ ஜயவர்தனபுரகோட்டை மாநகர சபையின் முதல்வர் ஐ.வி. பிரேமலால் மற்றும் அவரது மகன் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிட்டகோட்டே சந்தியில் நேற்று புதன்கிழமை சந்தேகநபர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் இத் தாக்குதலுக்குள்ளான மாநகர முதல்வர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்தோடு மாநகர முதல்வர் பயணித்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது, ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply