அரச, தனியார்- பஸ் கட்டணங்கள் புதன்கிழமை எகிறும்!

எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் அரச மற்றும் தனியார் பஸ்களின் கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. அத்துடன், எரிபொருள் நிவாரணத்தையும் கோரின.
இந்தநிலையில், இது தொடர்பான கலந்துரையாடலொன்று போக்குவரத்து அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கு இராஜாங்க அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும், கட்டண அதிகரிப்பு எத்தனை வீதத்தால் இடம்பெறும் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.

அதற்கான பட்டியலை தயாரிப்பதற்கு எதிர்வரும் புதன்கிழமைவரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அவகாசம் கோரியுள்ளார். எனவே, அன்றைய தினம்தான் புதிய கட்டப் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது.
அதேவேளை, பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்திலேயே கட்டண அதிகரிப்பு இடம்பெறும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply