கொரோனா தொற்றால் ஒரே நாளில் 94 பேர் மரணம்

நேற்றைய தினம் (04) நாட்டில் மேலும் 94 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 320,660 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 286,365 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply