சிறுமி உயிரிழப்பு அத்தானுக்கு மறியல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் சிறுமி உயிரிழப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிறுமியின் அத்தானை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுமியின் உயிரிழப்பை அடுத்துக் கைதுசெய்யப்பட்ட அத்தான் முறையானவர் கடந்த 19ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவரை மூன்று நாள்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் குறித்த சந்தேக நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Leave a Reply