காதலில் நம்பிக்கையை பெற, தனது காதலியின் கை மற்றும் கால்களை தன்னுடைய காரின் மேல் பகுதியில் படுக்கவைத்துபடி கட்டி வைத்து, காரை ஓட்டிச் சென்ற காதலனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலிக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கையைத் தெரிந்துகொள்ளப் புதிதாக ஒரு விநோதமான யோசனையைக் கூறி, அதனைச் செயல்படுத்த முயன்றுள்ளார்.
காதலியும் காதலனின் யோசனைக்கு சரி என்று கூறியதையடுத்து, குறித்த காதலன், தன்னுடைய காரின் மேல் பகுதியில் தன்னுடைய காதலியைப் படுக்கவைத்து, அவரது கை மற்றும் கால்களைத் தனது காருடன் சேர்த்து கயிற்றால் கட்டி உள்ளார்.
Advertisement
இதனையடுத்து, காரில் படுக்கவைத்து கயிற்றால் கட்டப்பட்ட தனது காதலியை, அந்த பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அதி வேகமாக ஓட்டிச் சென்றிருக்கிறார்.
இதனை பலரும் காணொளி எடுத்து வைரலான நிலையில், பொலிசாரின் கவனத்திற்கு சென்று பின்பு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.