கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் யானையுடன் மோதி நேற்று இரவு படுகாயமடைந்துள்ளார்.
முயிலவௌ, புபுதுபுர பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு படை வீரரான 28 வயதுடைய எஸ்.சமரநாயக்க என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
குறித்த இளைஞன் வயலுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, பிரதான வீதியின் ஊடாக யானை குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதாகவும் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.





