இரவோடு இரவாக அகற்றப்பட்ட ‘வெட்கக்கேட்டின் சின்னம்’ தூபி

கொங்ஹொங் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற நினைவுத்தூபி அகற்றப்பட்டுள்ளது.

8 மீட்டர் உயரம் கொண்ட குறித்த செம்பு நினைவுத்தூபி இரவோடு இரவாக கட்டுமாணத் தொழிலாளர்களால் அகற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

1989 ஆம் ஆண்டு ஜனநாயக ஆதரவாளர்கள், சீனப் படையினரால் கொல்லப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் இந்த நினைவுத்தூபி ‘வெட்கக்கேட்டின் சின்னம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவுச் சின்னத்தை அகற்றுமாறு கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஹொங்கொங் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply