
12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தடுப்பூசி ஏற்றப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 12 வயதுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ மாணவியருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி எப்போது ஏற்றப்படும் என்பது குறித்த விபரங்கள் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பைசர் தடுப்பூசி சிறார்களுக்கு ஏற்றப்படும் எனவும், பாடசாலை மாணவ மாணவியருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு போதியளவு தடுப்பூசிகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.





