வடக்கு கடல் பரப்புக்களில் இந்திய மீன்வர்களின் அத்துமீறலை கண்டித்தும், இதற்கான உரிய தீர்வை வலியுறுத்துமாறும் கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், பல்வேறு கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, வீதியில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.







