வடக்கு கடல் பரப்புக்களில் இந்திய மீன்வர்களின் அத்துமீறலை கண்டித்தும், இதற்கான உரிய தீர்வை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் போராட்ட பேரணி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு ஏ9 வீதியை மறித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காலில் மக்கள் விழுந்து அழுத்துள்ளனர்.






