கல்முனையில் கேஸ் சிலிண்டரில் கசிவு: தீப்பற்றியது அடுப்பு

கல்முனை மூன்றாம் குறிச்சி சின்னத்தம்பி வீதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   

சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு அடுப்பு வரை சென்று தீப்பற்றிக் கொண்டதனால் வீட்டினுள் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. தெய்வாதீனமாக உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. 

வீட்டினுள் புகை ஏற்படுவதை கண்ட இளைஞர்கள், உள்ளே சென்று சிலிண்டரை தூக்கி வெளியில் வீசியதால்,பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார். 

கல்முனை மூன்றாம் குறிச்சியில் உள்ள சின்னத்தம்பி வீதி, முதலாம் குறுக்குத் தெருவில், 20 ஆம் இலக்கத்திலுள்ள சுவேந்திரன் என்பவரது வீட்டிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.   கல்முனை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply