முதியோர் இல்லத்தில் கிட்டார் இசைத்து, கிறிஸ்மஸ் கீதம் பாடிய எதிர்க்கட்சித் தலைவர்!

நீர்கொழும்பில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற நத்தார் நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கிட்டார் இசைத்து, கிறிஸ்மஸ் கீதங்களை பாடி முதியோரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.

நீர்கொழும்பு புதிய ஜோசப் முதியோர் இல்லத்தில் நத்தார் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன ஏற்பாடு செய்திருந்தார்.

அங்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முதியோரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடியதுடன் அவர்களுடன் சில மணி நேரத்தை செலவிட்டுள்ளார்.

Leave a Reply