அரசாங்கம் நல்லம்; அமைச்சர்கள் சரியில்லை! சு.க குற்றச்சாட்டு

அரசில் உள்ள அமைச்சர்களின் பிழையாலே நாடு பாதாளத்தினுள் சென்றுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ஹேமல் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் உள்ள பல வித பிரச்சனைகள் குறித்து பார்த்தால்
அரசாங்கமே பொறுப்பில்லை.அரசாங்கம் பாரிய தவறு ஒன்றும் செய்ய வில்லையே?

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ பொறுப்பில்லை.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிறந்த தலைவர்.

அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் பிழையான நடவடிக்கையால் இவ்வாறான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒன்றினைந்தால் மாத்திரமே முடியும்.

இன்னும் மூன்று மாத காலத்திற்குள், பொருளாதார பிரச்சனை தீர்ந்தது, நாடு பழைய நிலைக்கு திரும்பும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply