பூநகரி கணேசா கோவிலில் அகழ்வாராய்வு ஆரம்பம்!

வரலாற்றுத் தொன்மைவாய்ந்த பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெளதாரிமுனை கணேசா கோவிலில், தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த கோவிலில் வரலாற்றுத் தொன்மையான சான்றுகள் இருக்கக்கூடும் என்ற ரீதியில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தலைமையிலான யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை நான்காம் வருட மாணவர்கள் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து கோவில் வளாகப் பகுதிகளில் அகழ்வுப்பணியை ஆரம்பித்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தினுடைய புனர்நிர்மாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் வருணி ஜெயதிலகவும் இந்த அகழ்வாய்வுப்பணியில் இணைந்துள்ளார்.

Leave a Reply