பிசிஆர் பரிசோதனை அறிக்கையிலும் மோசடி! மூவர் கைது

கொச்சிக்கடை – பொருத்தோட்டையில் போலியான பிசிஆர் பரிசோதனை அறிக்கைகளை விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வோருக்கு போலியான பிசிஆர் அறிக்கைகளை வழங்கியுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது 17 போலியான பிசிஆர் அறிக்கைகள் மற்றும் அச்சிடும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply