
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
”சேவைகளுக்கான தேவைகளின் அடிப்படையிலேயே பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டுமேயன்றி, ஒரு குழுவுக்குத் தேவையான வாக்குத் தளத்தை விருத்தி செய்வதற்குக் களம் அமைத்துக் கொடுப்பதற்காக அல்ல” என்று விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சில கோரிக்கைகளை முன்வைத்து சில நாள்களாகப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



