மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை!

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியாகும்போது, மசகு எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும்.

மேலும், இதனால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கப்படலாம்.

உலக சந்தையில் டொலர் 15ஆல் எரிபொருள் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையிலேயே, எமது நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்திற்கு புதிதாக 54 வைத்திய அதிகாரிகள் நியமனம்!

Leave a Reply