
ஊர்காவற்துறை மேற்கு கயித்தம்புலம் பகுதியில், கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதே பகுதியைச் சேர்ந்த கனகசபை ஜெனிஸ்டன் (வயது – 21) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
அந்த இளைஞன், கிணற்றுக் கட்டிலிருந்து நித்திரைத் தூக்கத்தில் அவ்வாறு வீழ்ந்திருக்கக்கூடும் என்று ஆரம்ப விசாரணைகளைக்கொண்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இறப்பு விசாரணை, மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.




