அமைச்சர் டக்ளஸின் காலில் விழுந்த அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!

பல்வேறு முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுகளிடன் சம்பந்தப்பட்ட அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தண்டனை இடமாற்றல் வழங்கப்படவுள்ள நிலையில், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று தன்னை இடமாற்றலிலிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அச்சுவேலி ஓ.ஐ.சி யாழ்ப்பாணத்தில் செயற்படும் அரச ஆதரவு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது அருவருடிகளுக்கு ஆதரவாக செயற்படுள்ளார்.

குறித்த அரசு ஆதரவு கட்சியினரை நம்பி பல்வேறு சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவர் தொடர்பில் பொதுமக்களால் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராயப்பட்டு அவருக்கு உடனடியாக இடமாற்றல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அச்சுவேலி ஓ.ஐ.சி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு சிவில் உடையில் சென்று காலில் விழுந்து தனது இடமாற்றலை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எமக்கு கடல் உணவே வேண்டும்; கடல் அட்டை நாம் உண்பதில்லை: எனவே முதலில் எதை அபிவிருத்தி செய்ய வேண்டும் என சிந்திப்போம் – செல்வின்

Leave a Reply