யாழ் உடுவிலைச் சேர்ந்த 16 வயதுடைய 5 மாணவிகளுக்கு கொரோனா உறுதி!

யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 5 மாணவிகளும் 16 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலையே இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்ட 5 மாணவிகளும் சேர்ந்து கல்வி கற்றவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Leave a Reply