மட்டக்களப்பு – வாழைச்சேனையில் வர்த்க நிலையமொன்றில் சாக்கு மூட்டையொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இரண்டு சாக்கு மூட்டைகள் இருப்பதாக வர்த்தக நிலைய உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த மூட்டைகளை பரிசோதித்ததில், அதில் பெண்ணொருவரின் சடலம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அதே பகுதியைச் சேர்ந்த காணாமல் போன 55 வயதுடைய பெண்ணின் சடலமாக இருக்கலாம் என பொலிஸாரினால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும், முச்சக்கர வண்டி சாரதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பெண்ணின் மரணம் தொடர்பில் நீதிவான் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை என்பன இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.