அஸ்ட்ராசெனெகா குறித்து பொது மக்களுக்கான அறிவிப்பு!

அஸ்ட்ராசெனெகா 2 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேலும் தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையை கட்டாயமாகக் எடுத்து வர வேண்டும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,266 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply