பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்

<!–

பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் – Athavan News

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதன்படி, அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2ஆவது டோஸைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக எடுத்து வர வேண்டும் எனவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


Leave a Reply