நாட்டின் பொருளாதார பிரச்சனை காரணமாக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த பழங்குடியினர்!

திம்புலாகல – தலுகான பகுதியிலுள்ள பழங்குடியினர், தற்போதைய விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம், தலுகானாவில் உள்ள புராதன பத்தினி தேவாலயத்திற்கு அருகில் இன்று இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் மற்றும் பொருட்களின் விலை உயர்வினால் எழுந்துள்ள பொருளாதார பிரச்சனை காரணமாகவே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலுகான, யக்குரே, மில்லனா, கொலக்கனவாடியா, போத்த குடவெவ, எல்லேவெவ மற்றும் ஏனைய கிராமங்களில் வசிக்கும் சுமார் 800 பழங்குடியின குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தலுகானா பழங்குடியின தலைவர் கே.லிசினோனா தெரிவித்தார்.

தலுகான கிராமத்தில் சுமார் 450 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் வருமானம் அற்ற பழங்குடியினத்தவர்களே அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பல குடும்பத்தினர் வருமானமற்ற வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், ஒரு வேளை உணவு உண்ணும் மக்களும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவர்களின் தொழிலாக தேன் வியாபாரம் காணப்படுகின்ற வேளையில், வாழ்வாதாரம் அற்ற நிலையில் தற்போது உள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Leave a Reply