மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று கொரோனா அல்ல! எச்சரிக்கும் ஐ.நா.

கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என்றும், இன்னும் பல பெருந்தொற்றுகள் வரும் எனவும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்க பதிவில்,

கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும்.

கொரோனாவை கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கும்போதே அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டும்.

உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தையொட்டி, இதில் நாம் கவனம் செலுத்துவோம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply