பொலிஸார் என கூறி கப்பம் பெற்றவர் கைது: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பழக்கடை ஒன்றின் வியாபாரியை, தம்மை பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவித்து, மிரட்டி பணம் பறித்த இரண்டு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 31 ஆம் திகதி பொலிஸார் என தம்மை அடையாளப்படுத்திய இருவர், பழக்கடை வியாபாரி ஒருவரை ஏமாற்றி 7 ஆயிரத்து 500 ரூபாய்கும் அதிகமான பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரனைகளை முன்னெடுத்திருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகிலுள்ள கடை ஒன்றின் சி.சி.ரி.வி கமரா பதிவுகளின் அடிப்படையில் இருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் அடையாளங்காணப்பட்டனர்.

அடையாளங்காணப்பட்ட சந்தேக நபர்களின் புகைப்படங்கள் யாழ். மத்திய பேருந்து நிலைய பழக்கடை வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டதோடு, சந்தேகநபர்களை கண்டால் தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சந்தேக நபர்களில் ஒருவர் நேற்று (05) பேருந்து நிலையத்துக்கு வந்த நிலையில், அங்கிருந்த இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டு யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபரைப் பொறுப்பேற்ற யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர், யாழ்ப்பாணம் குற்றதடுப்பு பிரிவினரிடல் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கீரிமலை – நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *