பி.சி.ஆர், அன்டிஜென் பரிசோதனைகளுக்கு கட்டண கட்டுப்பாடு

பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கு அடுத்தவாரம் முதல் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

21 மாவட்டங்களைச் சேர்ந்த பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தும் 45 வைத்தியசாலைகளும், அன்டிஜென் பரிசோதனைகளை நடத்தும் 43 வைத்தியசாலைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

வௌ;வேறு விலைகளில் குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி பி.சி.ஆர் பரிசோதனை 5 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரத்து 500 ரூபா வரையும், அன்டிஜென் பரிசோதனை 2 ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரத்து 900 ரூபா வரையும் மேற்கொள்ளப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த வாரம் முதல் குறித்த பரிசோதனைகளுக்கு கட்டணங்களை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply