வடக்கு அயர்லாந்தில் 16- 17 வயதுடைய சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி!

வடக்கு அயர்லாந்தில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான முதல் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இந்த வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு எந்தவிதமான உடல்நலக் குறைபாடுகளும் இல்லாமல் தடுப்பூசிகளை வழங்கும் பிரித்தானியாவின் முதல் நாடு இதுவாகும்.

தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழு (ஜேசிவிஐ) பரிந்துரையைப் பின்பற்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

16 மற்றும் 17 வயதுடையவர்கள் வடக்கு அயர்லாந்தில் சுமார் 45,000பேர் உள்ளனர்.

வடக்கு அயர்லாந்தில் உள்ள பிராந்திய தடுப்பூசி மையங்கள், ஃபைஸர் தடுப்பூசிகளுக்கு நடமாடும் சேவையை வழங்கும்.

முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு, ஒன்லைன் முன்பதிவு தளம் எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply