தடுப்பூசிகளை பயன்படுத்தாத நாடுகள் தொடர்பில் ஐ.நா கவனம்

கொரோனா தடுப்பூசிகளை பெற்றும் அவற்றை பயன்படுத்தாத நாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.

நிர்வாகக் காரணங்கள், கவனக் குறைவு மற்றும் தடுப்பூசி பெற்றுக் கொள்வதை நிராகரித்தல் போன்ற காரணங்களுக்காக சில நாடுகள் தடுப்பூசிகளை பயன்படுத்தாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டெபன் டுபாரிக் தெரிவித்துள்ளார்.

கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் 138 நாடுகளுக்கு 186.2 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு இந்த வருட இறுதிக்குள் 2 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply