உண்மையான கொரோனா தகவல்களை அரசாங்கம் மறைக்கிறது – சஜித் குற்றச்சாட்டு

உண்மையான கொரோனா தகவல்களை அரசாங்கம் மறைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான உண்மையான தகவல்கள் வெளிவரும் போது, புதிய சட்ட, ஒழுங்கு விதிகளை வெளியிட்டு அவற்றை அரசாங்கம் மறைக்;கிறது.

சட்டத்திட்டங்களை அமுல்படுத்தி கொரோனா வைரஸ் தொடர்பான உண்மையான தகவல்களை மறைக்கக் கூடாது.

நாடு முகங்கொடுத்திருக்கும் இக்கட்டான சூழ்நிலையினை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் இதுபோன்ற நிலைமைகளில் உண்மைகளை மறைப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆபத்தான நிலையினை ஏற்படுத்தும் என்றார்.

Leave a Reply