ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் கொரோனா உறுதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,  அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் அவர், தற்போது அங்குனுகொலபெலஸ்ஸ கொவிட் -19 சிகிச்சை மையத்தில் சிகிச்சைப் பெற்று வருவதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் ரஞ்சன் ராமநாயக்கவின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் தமது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக விசேட அனுமதியில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சென்றிருந்தார்.

இதன்போது, ஹரின் பெர்னாண்டோ உட்பட அரசியல் பிரமுகர்கள் சிலருடனும் அவர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply