கொரோனா பரவல் அதிகரிப்பு: சுகாதார கட்டுப்பாடுகளில் இறுக்கம்

நாட்டில் கொரோனா பரவல் நிலைமை அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு, இதுவரையில் வழங்கப்பட்டிருந்த அனுமதி சிலவற்றில் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கொரோன தடுப்பு செயணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று (06) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி,

500 க்கும் அதிகமான இருக்கைகளைக் கொண்ட மண்டபங்களில் இடம்பெறும் சகல நிகழ்வுகளிலும் 150 பேர் மாத்திரமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு 500 க்கு குறைந்த இருக்கைகள் கொண்ட மண்டபங்களில் 100 பேர் மாத்திரமே பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளன.

மேலும் மரண நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே பங்குக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply