கொழும்பில் 5 இடங்களில் குண்டுத் தாக்குதல் என்ற செய்தியில் உண்மையில்லை – பொலிஸார்

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இருப்பினும் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை, தெஹிவளை, நுகேகொடை, கல்கிசை மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளில் இந்த குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

எவ்வாறாயினும், அவ்வாறு வெளியான தகவல்களில் உண்மையில்லை என அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கல்கிசை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply