இரண்டு வாரங்களில் நிலைமை மோசமடையும்: கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு அரசுக்கு எச்சரிக்கை

நாளாந்தம் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளாந்த கொரோனா தொற்றாளர்கள், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அடுத்த இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும்.

கொரோனாவின் அபாய நிலைமையை வைத்தியசாலைகளால் கையாள முடியாத நிலை விரைவில் உருவாகும்.

தற்போது தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் இறுக்கத்தினை மேற்கொண்டால் மாத்திரமே கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

தடுப்பூசிகளின் எண்ணிக்கையிலுள்ள குறைவும் கொரோனா மரணங்களின் அதிகரிப்புக்கு ஒரு காரணமாகும்.

பெரும்பாலானவர்கள் தடுப்பூசியின் முதலாவது டோஸை மட்டுமே பெற்றுள்ளனர்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றால் மாத்திரமே கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply