ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள் நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் கத்திக்குத்து: 10பேர் காயம்!

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பயணிகள் ரயிலில் ஒருவர் குறைந்தது 10 பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதா, ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, நகரின் மேற்கில் உள்ள செடகயா வார்டில் ரயிலில் இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்தது.

செடாகயா வார்டில் உள்ள சீஜோகாகுன்-மே ஸ்டேஷனுக்கும் சோஷிகாயா-ஒகுரா ஸ்டேஷனுக்கும் இடையே உள்ள ஒடக்யூ லைன் ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தளம் ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

காயமடைந்த 10 பயணிகளில் ஒன்பது பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதே நேரத்தில் 10ஆவது நபர் சிகிச்சை முடிந்து வெளியேறினார் என்று டோக்கியோ தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

எனினும், எவருக்கும் உயிராபத்தான காயங்கள் எதுவும் இல்லை எனவும் 20 வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்தாரி கத்தியை விட்டுவிட்டு, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பின்னர் சிறிய வணிக கடைக்குள் புகுந்த அவரை கைதுசெய்ததாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply