வீடொன்றில் இருந்து தாய், மகன் உள்ளிட்ட மூவரின் சடலம் மீட்பு

கல்கமுவ, மஹநான்தேரிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூவரின் சடலங்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளன.

28 வயதுடைய திருமணமான பெண், அவரது 10 வயது மகன் மற்றும் அந்த பெண்ணின் 28 வயதான கள்ளக்காதலன் ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பெண் மற்றும் அவரது மகனை கொலை செய்த கள்ளக்காதலன் தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply