நல்வழியை நோக்கி பயணியுங்கள்- முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை

தவறான வழியை நோக்கி பயணிக்காமல் நல்வழியை நோக்கி பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவுரை வழங்கியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் சமூகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இருக்கும் ஏனையோரையும் விடுவிக்க கூடியதாக இருக்கும்.

எனவே முன்னரைப் போல பிழையான வழிகளில் செல்லாது சரியான பாதை நோக்கி செல்லுங்கள்.

அதாவது நல்லதை சிந்தித்து, சமூகத்தில் உள்ளோர் உங்களை நல்லவர்கள் என்று சொல்லும் அளவுக்கு உங்களது வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்.

மேலும்  முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply