நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கட்டுப்பாடு! வெளியானது தகவல்

இலங்கை முழுவதும் புதிய கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் தமது தொழிலிற்கான அடையாள அட்டையினை வைத்திருக்க வேண்டுமெனும் நடைமுறையினை கட்டாயப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும் , பொதுபோக்குவரத்து சேவையினை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பயன்படுத்துகின்றனரா என்பது குறித்து திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

முறையற்ற விதத்தில் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை திடீர் சோதனைக்குட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்தும் அளவிற்கு கொரோனா வைரஸ் தாக்கம் காணப்படுகிறது.

அத்தோடு அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளமையால், அவர்களது போக்குவரத்தினை மாத்திரம் கருத்தில் கொண்டே பொது போக்குவரத்து சேவைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply