முன்பு போல இனியும் தவறான வழியில் செல்லாதீர்கள்: முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தளபதி அறிவுரை

முன்பு போல இனியும் தவறான வழியில் செல்லாது, சரியான வழியில் பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

இன்று (07) யாழுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா முன்னாள் போராளிகளுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர் முன்னாள் போராளிகளுடன் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் சிலர் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்படரவர்கள் அனைவரும் சமூகத்தில் நல்லபடியாக இருந்தால் மட்டுமே சிறையிலுள்ள ஏனையோரையும் விடுவிக்க முடியும்.

நீங்கள் அனைவரும் நாட்டில் நல்ல பிரஜைகளாக இருக்க வேண்டும்.

முன்பு போல இனியும் தவறான வழியில் செல்லாது, சரியான வழியில் பயணியுங்கள்.

தவறான பாதையில் சென்றால் உங்களது எதிர்காலம் வீணாகிவிடும்.

இராணுவத்தினர் என்ற அடிப்படையில் உங்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம்.

நாங்கள் உங்களை எமது சகோதரர்களாகவே பார்க்கின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *