துறைமுகத்தில் பணியாற்றும் 600 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லலை என துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
துறைமுக அதிகாரி சபையில் தற்போது 9 ஆயிரம் பேர் மாத்திரமே பணியாற்றுகின்றனர்.
அவர்களில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை சிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.