பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை குறிவைக்கும் மர்ம மனிதர்கள் செய்யும் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் கடந்த இருவாரங்களாக அதிகரித்துள்ளதாக அக்கிராம மக்கள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர்.
வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு நிர்வாணமாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்தும் வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகாெள்ள முற்பட்டுள்ளனர்
மேலும் குறித்த மர்ம மனிதர்களின் அட்டூழியங்கள் கடந்த இருவாரங்களாக அதிகரித்த நிலையில் மதவுவைத்த குளத்தில் வாழும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு இவ் விடயம் குறித்து இப் பிரதேச மக்கள் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரிடம் நேற்று முன்தினம் (05) முறைப்பாடு செய்தும் அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், மர்மமனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் குறித்த பிரதேச மக்கள் நிம்மதியாக இரவு நேரங்களில் இருக்க முடியாது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறே சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் முழுவதும் கிறீஸ் பூசி மக்களை அச்சுறுத்திய சம்பவம் போல தற்பொழுது இந்த சம்பவம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.