விமானம் மூலம் சீனாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ள இலங்கையின் பெறுமதியான பொருள்

இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் கிணறு ஒன்றை தோண்டும்போது கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரியதென தெரிவிக்கப்படும் மாணிக்கக் கல் பற்றி பல ஊடகங்களில் செய்தி வெளியான வண்ணம் இருந்தன.

தற்பொழுது அந்த இரத்தினக்கல் பற்றி மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் கிணறு ஒன்றை தோண்டும்போது கிடைக்கப்பெற்ற மாணிக்கக் கல் உட்பட மேலும் சில மாணிக்கக் கற்கள் சீனாவுக்கு விரைவில் கொண்டுசெல்லப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இந்தக் கற்கள் விசேட விமானம் ஊடாக சீனாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு நடைபெறவுள்ள ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளன என தெரியவந்துள்ளது.

அத்தோடு மாணிக்கக் கல் தொழிற்துறை சார்ந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply