இலங்கைக்கு மேலும் ஒரு தொகை சினோபார்ம்

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட 1.86 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாட்டை வந்தடைந்தன.

இவ் விடயத்தை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 1869, யூ.எல் 865, யூ.எல் 869 என்ற மூன்று விசேட விமானங்கள் மூலம் இவை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

மேலும், கடந்த மார்ச் முதல் இதுவரையில் ஒரு கோடியே 30 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளை சீனாவிலிருந்து தமது விமானங்கள் மூலம் எடுத்து வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply