பிணவறைகளில் துர்நாற்றம்-அழுகும் நிலையில் சடலங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த காரணத்தினால், வைத்தியசாலை நடைபாதை, தோட்டம் என காணும் இடம் எல்லாம் நோயாளர்கள் நிரம்பி காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், ராகம போதனா வைத்தியசாலை உட்பட சில வைத்தியசாலைகளில் தகனம் செய்ய முடியாமல் கொரோனா சடலங்கள் நிரம்பி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ள தகன மேடைகள் செயலிழந்த காரணத்தால் குறித்த உடலங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ராகம போதனா வைத்தியசாலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட சடலங்கள் தகனம் செய்ய முடியாமல் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply