மன்னாரில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மன்னாரில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் வைத்தியர் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னாரில் புதிதாக 13 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய மாவட்டத்தில் இதுவரை 1,171 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 10 பேர் இதுவரை வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply