கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் இறுக்கமான நடைமுறைகள்

இன்றைய ஆடி அம்மாவாசை நாளை முன்னிட்டு, இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் பிதிர் தர்ப்பணம் கீரிமலை நகுலேஸ்வர ஆலய கடற்கரையில் மக்களால் சிறப்புடன் நடைபெறுள்ளது.

இந்துக்கள் தமது பிதுர் கடன்களை நிறைவேற்றுவதற்காக தை அமாவாசை , ஆடி அமாவாசை , புரட்டாதி மாத மஹாளய அமாவாசை ஆகிய மூன்று நாட்களும் மிகவும் பக்திபூர்வமாக பிதுர்களை திருப்திப்படுத்தும் வகையில் அவர்களது வழித்தோன்றல்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, தற்போதைய கொரோனா தொற்று பரவல் சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply