யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் ஏற்பாட்டில், நேற்று சனிக்கிழமை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
தற்போது இவற்றை செய்து முடிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், இவற்றிற்கான கட்டட வரைபடங்கள் (architectural drawings) விரைவில் தயாரிக்கப்பட்டு வெளிவிடுவதாகவும், எமது மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு எமது தமிழ் உணர்வாளர்கள் அனைவரினதும் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்துடனான இச்சந்திப்பில், அதன் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம், செயலாளரான மருத்துவ பீட பதிவாளர் ரமேஷ், மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன், புனர்நிர்மாண அலுவலர் கபிலன், மாநகர சபை உறுப்பினர்களான பார்த்திபன், தனுயன் மற்றும் கண்டியில் இருந்து வருகை தந்த பட்டய கட்டட கலைஞர் ஹேரத், அளவை அளவையியலாளர் (quantity surveyor) சரத் சத் குமார, தொல்லியலாளர் மைத்திரிபால, மூத்த புனர்நிர்மாண அலுவலர்களான (senior conservation officers) பண்டாரநாயக்க, மெத்தானந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.